Writer,
"வணக்கம் வாழ்த்துக்கள். பலநூறு இளம் பிள்ளைகளுக்குப் பார்வையாய் விழியாய்ப் பணிபுரிந்து அவர்தம் வாழ்வை உயர்த்தும் தொண்டு நிறுவனம் தர்ஷினி.சக மனிதர் துயர்தீர்க்கும் சமூகப் பணி, சரவேஸ்வரனுக்குச் செய்யும் சமயப் பணியை விட அவசியம்.. அவசரம் .. காலத்தையும் கைக்காசையும் செலவழித்து நற்பணியாற்றும் நல்ல உள்ளங்களை வாழ்த்துகிறேன். தொண்டு தொடர துயர்கள் மறைய பரம் பொருளைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்."
-சுகி. சிவம்